என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சென்னை சிறுவன் பிரக்ஞானந்தா
நீங்கள் தேடியது "சென்னை சிறுவன் பிரக்ஞானந்தா"
இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Praggnanandhaa #SecondYoungestGrandmaster #ChessGrandmaster #OPanneerSelvam
சென்னை:
சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பிரக்ஞானந்தா. இவன் கடந்த 2013-ம் ஆண்டில் 8 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றான். அதைத்தொடர்ந்து 2015-ம் ஆண்டில் 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றான். இதன்மூலம் 10 வயதிலேயே இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் வென்று சாதனைப் படைத்தான்.
இதற்கிடையே, இத்தாலி நாட்டில் நடைபெற்ற கிரிடின் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா கலந்து கொண்டான். தனது 9-வது சுற்றுப் போட்டியில், ரேட்டிங்கில் 2514 புள்ளிகள் பெற்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த புருஜெஸ்சர்ஸ் ரோலாந்தை எதிர்கொண்டான்.
இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து, பிரக்ஞானந்தா ரேட்டிங்கில் 2500 புள்ளிகளைப் பெற்று இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றான்.
இந்நிலையில், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் டுவிட்டரில் கூறுகையில், சதுரங்க போட்டியில் சர்வதேச அளவில் தொடர் வாகைகள் சூடி உலகின் இரண்டாம் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தி, இந்தியாவை பெருமையடையச் செய்த சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஆர்.பிரக்ஞானந்தா மென்மேலும் சாதனைகளைத் தொடர எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #Praggnanandhaa #2ndYoungestGrandmaster #ChessGrandmaster #OPanneerSelvam
இத்தாலி போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். #Praggnanandhaa #2ndYoungestGrandmaster #ChessGrandmaster
புதுடெல்லி:
சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பிரக்ஞானந்தா. இவன் கடந்த 2013-ம் ஆண்டில் 8 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றான். அதைத்தொடர்ந்து 2015-ம் ஆண்டில் 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றான். இதன்மூலம் 10 வயதிலேயே இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் வென்று சாதனைப் படைத்தான்.
இதற்கிடையே, இத்தாலி நாட்டில் நடைபெற்ற கிரிடின் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா கலந்து கொண்டான். தனது 9-வது சுற்றுப் போட்டியில், ரேட்டிங்கில் 2514 புள்ளிகள் பெற்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த புருஜெஸ்சர்ஸ் ரோலாந்தை எதிர்கொண்டான்.
இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து, பிரக்ஞானந்தா ரேட்டிங்கில் 2500 புள்ளிகளைப் பெற்று இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றான்.
இந்நிலையில், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் டுவிட்டரில் கூறுகையில், சென்னை சிறுவன் பிரக்ஞானந்தா 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். அவரது பயிற்சியாளர் ரமேஷுக்கும் வாழ்த்துக்கள். இது உண்மையான சாதனை என பதிவிட்டுள்ளார். #Praggnanandhaa #2ndYoungestGrandmaster #ChessGrandmaster
×

X